Sunday 21 June 2020

அதன் பெயர்தான் குரு.🙏

வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் -
"மந்திரம்."

செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் -
"தந்திரம்."

ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் -
"இசை".

பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் -
"தரிசனம்."

அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் -
"யோகா".

மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் -
"தியானம்."

*சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் -
 வாசி.

சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் -
குண்டலினி*.

ஒரே ஒரு பெயர் மட்டுமே அமைதியை உருவாக்குமானால்....

அதன் பெயர்தான் குரு.🙏

Motivational - 22 June 2020




Monday 15 June 2020

திருமணத்திற்கு பிறகு ஆண்கள் வாழ்க்கை நரகம் என்றால்....???

திருமணத்திற்கு பிறகு ஆண்கள் வாழ்க்கை நரகம் என்றால்....??? 

அது பொய்...!!!!

மனைவியை நேசிக்க தெரியாதவனின் வாழ்க்கை தான் நரகம் ....!!!!

பெண்ணை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு....?????

அவளோட உலகம் ரொம்ப சின்ன உலகம்....!!!!!அதுல நீ  தான்  ​ராஜா​....!!!!

அவள் உனக்காக படைக்கப்பட்டவள்...!!!!

அவள் உன்னில் பாதி....!!!!

அவள் உனக்கு மட்டும் சொந்தமானவள்....!!!

அவள் வீட்டில் அவள் ஒரு குட்டி தேவதை....!!!!

ஆனால்....!!!!!

உன் வீட்டில்....!!!!!

உனக்கு சமையல் செய்யும்  சமையல்காரி....!!!!!

உன் வீட்டை பாதுகாக்கும் காவல்காரி....!!!!

உன் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி...!!!

உனக்கும் உன் பிள்ளைக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் செவிலியர்..!!!

உன் பிள்ளைகளை கவனிக்கும் ஆயா...!!!!

உன் மனைவிக்காக நீ என்ன செய்தாய்....?????????

அவள் உனக்காக தாய் தந்தை அக்கா அண்ணா தங்கை தம்பிஎன அனைத்து உறவையும் வேண்டாம் என விட்டு விட்டு #எனக்குஎன்கணவன்போதும்என்றுசொல்லிவிட்டு_
வருகிறாள்

நீ தான் அவளுக்கு

ஒரு பாசமான ​தாயாக​...!!!!

ஒரு அன்பான ​தந்தையாக​...!!!

ஒரு அக்கறையான ​அண்ணனாக​....!!!!

ஒரு அறிவான ​அக்காவாக​....!!!!

ஒரு பண்பான ​தம்பியாக​....!!!!

ஒரு சேட்டையான ​தங்கையாக​....!!!!

நல்ல ​தோழனாக​....!!!!

நல்ல அன்பான ​கணவராக​ இருங்கள்.....!!!! பாருங்கள் 
 
பெண்கள் அடிமை தான் அதிகாரதிற்க்கு அல்ல.... 
 அன்பிற்க்கு மட்டுமே அடிமை  என புரிந்து கொள்விர்கள்
 


 அவள்  உன்  ​wife​ மட்டும் இல்லை....!!!!!

அவள்  தான் உன் ​Life​ _ம்....!!

இதை வாசித்து பார் உன் மனைவி உனக்கு அழகாக தெரிவாள் 

உன் மனைவியே நேசித்து பார் உன் வாழ்க்கை அழகாக மாறும்...

நன்றி...

''இருப்பதைக் கொண்டு.....''

''இருப்பதைக் கொண்டு.....''

உண்மையான வாழ்க்கையின் வெற்றி என்பது நிலையான மகிழ்ச்சியை அடைவதே ஆகும். மகிழ்ச்சி என்பது நமது மனதின் ஒரு நிலை தான். 

அதாவது எந்த சூழ்நிலையிலும் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது தான் உண்மை. 

போதும் என்கின்ற மனப்பான்மை உள்ளவர், மற்றும் இருப்பதை வைத்து நிறைவாக வாழும் கலை அறிந்தவர் தான் உண்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப்  பெறுகிறார்கள்.

சில நேரம் நமது செயல்களை அதன் விளைவுகளை எண்ணி தேவைக்கு அதிகமாகவே கவலைப்படுகின்றோம்..

நமக்கு கிடைத்து இருக்கும் இந்த வாழ்க்கையை நல்லவைகளுக்காக, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு நலத்தோடும், நீண்ட ஆயுளுடனும், வாழ்ந்ததற்காக மகிழ்ச்சியடைந்தாலே இன்னமும் ஆனந்தமும், உடல் நலமும் பெற்று சிறப்பாக வாழ்வோம்..

பணம், சொத்து நமக்கு வாழ்க்கையில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே கொடுக்கும். 

நம்மிடம் இருப்பதை வைத்து திருப்தி அடைவதும், இல்லாததை நினைத்து வருத்தப்படாமல் வாழும் மனமுள்ளவர்கள் எவரோ அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுள் பெற்று மகிழ்வுடன் வாழ்வார்கள்..

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜென்னி கால்மன்ட் என்ற பெண்மணி 122 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்தார்..

21.12.1875 முதல் 04.08.1997 வரை வாழ்ந்தார். தனது கடைசி 12 ஆண்டுகள் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே வாழ்ந்தார்..

இறுதி 5 ஆண்டுகள் அவருக்கு காது கேட்கவில்லை. பார்வையும் குறைந்து விட்டது..

ஆனாலும் இறுதி வரை மகிழ்சியாகவே வாழ்ந்து வந்து இருக்கிறார்..

இவரது மகளும், மகனும், பேரனும் கூட இவருக்கு முன்னால் காலமாகி விட்டார்கள்.

இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததற்கு அவர் கூறியது,
"நான் எப்போதும் எதற்காகவும், பெரிதாக ஆசை கொள்ள மாட்டேன். என்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்து மன நிறைவு கொள்வேன் மற்றும் என்னிடம் இல்லாதைப் பற்றி எந்த சூழலிலும்  கவலைப்பட்டதே இல்லை என்று சொன்னாராம்.."

`உனக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!’ என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லிச் சென்று  இருக்கிறார். 

எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட, எது இருக்கிறதோ அதை நினைத்து ஆனந்தப்பட்டு அதை வைத்து நிம்மதியான வாழ்க்கை வாழலாம்!

ஆம்., நண்பர்களே..,

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நம்மிடம் என்ன உள்ளதோ, அதை வைத்து திருப்தி கொள்ள வேண்டும். இல்லாதவற்றை எண்ணிக் கவலை கொள்ளக் கூடாது. 

இவற்றை நாம் கடைபிடித்தால் நம்மைச் சுற்றி உள்ள அனைத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். ஒரு முறை கடைபிடித்து தான் பாருங்களேன்..✍️🌹

இனிய காலை வணக்கம் !!!!

Motivational - 16 June 2020