Sunday, 6 December 2020

‘’வாழ்வதற்கு ஆயிரம் வழிகள்...!"

 ‘’வாழ்வதற்கு ஆயிரம் வழிகள்...!"


போராட்டமே இல்லாத வாழ்க்கை இங்கு யாருக்கும் அமைவதில்லை...


போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது. பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது...


பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவைகளை பூர்த்தி செய்கிறது..


போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவது தான் வாழ்க்கை. இன்று மனிதன், போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றான், அதைத்தான் விரும்புகின்றான்...


வாழ்க்கையில் தங்கள் குறிக்கோளை நிலை நிறுத்திக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டி உள்ளது...


பூந்தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மலர்கள் பூப்பதுண்டு. ஆனால்!, அவை நிலைப்பது இல்லை, அது நியதியும் இல்லை...


அதுபோலத்தான் வாழ்க்கையெனும் பூந்தோட்டத்தில் இன்பம், துன்பம் வருவதும் போவதும்.. எவ்வாறு பூந்தோட்டத்தில் மலர்ந்த ஒரு பூ நிலைப்பது இல்லையோ அதேபோல் தான் வாழ்க்கையும்...


போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே வெற்றி பெற இயலாது.. போராட்டம் இல்லை என்றால் வாழ்க்கை உப்பு சப்பு  இல்லாமல் போய் விடும்.


வாழ்க்கையில் உங்களுக்கு அழுவதற்கு நூறு காரணங்கள் இருந்தாலும் சிரிப்பதற்கு என்னிடம் ஆயிரம் காரணங்கள் இருக்கிறது என்று வாழ்ந்து காட்டுங்கள்.


சரியான, நேர்மையான வாழ்க்கை பயணப் பாதை முட்கள் நிறைந்த கரடு முரடான பாதை தான்...


இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும், பிறரின் அவமானப் பேச்சுக்களும், பழிச்சொற்களும், நியாயமில்லாத விமர்சனங்களும் தான் நிறைந்து இருக்கும்...


ஆம் நண்பர்களே...!


🟡 களை இல்லாத தோட்டம் இல்லை; அதுபோலவே தான், போராட்டம் இல்லாத வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கையை அழகானதாக மாற்றிக் கொள்வது நம் கையில் தான் உள்ளது...!


🔴 எல்லோர் வாழ்விலும் இன்ப, துன்பங்கள் உள்ளன. நாம் அவற்றை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது மிக முக்கியம். ஆசையை குறைத்துக் கொள்ள வேண்டும். மன நிறைவு இருந்தாலே போதும், வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்...!!


⚫ போராட்டங்கள் இருந்தாலும் கூட, யாரும் வாழ்க்கையை  வெறுப்பதில்லை. போராட்டங்களையெல்லாம், ஏற்றுக் கொள்ளவும், நமக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளவும் பழகினாலே போதும், வாழ்க்கை பூந்தோட்டமே...!!!''


🔘 நீங்கள் எப்படிப்பட்ட பாதையில் பயணம் செய்தாலும்  உங்கள் நற்சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்புங்கள். வாழ்க்கைப் பயணம் இனிதாய் அமையும். வாழ வாருங்கள்; வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம் உள்ளன...!🌹

No comments:

Post a Comment