Saturday 25 April 2020

​- வளையல் குலுங்க வளரும் உடல் ஆரோக்கியம்

நம் முன்னோர்கள் இதை அணிய சொல்ல காரணம் என்ன < <​

​- வளையல் குலுங்க வளரும் உடல் ஆரோக்கியம் -​

 நம்முடைய கலாச்சாரத்தில் பிறந்த குழந்தைகளில் இருந்து பாட்டிகள் வரை, வளையல் என்பது பெண்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான விஷயங்களில் ஒன்று...!

வளையல் அணியும் பழக்கத்தை ஏதோ ஒரு காரணமாகத் தான் நம் முன்னோர் ஏற்படுத்தியுள்ளார்கள். இதனால் நாம் அடையும் மருத்துவ பயன்கள் ஏராளம்.

​நேர்மறையான எண்ணங்கள் :​

வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது ஏற்படும் ஒலி, நமக்குள் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.

இதனால் நம்முடைய எண்ணங்கள் தெளிவு பெற்று, மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகும். நாடி நரம்பில் படும்படி வளையல் அணிவதால், அது உடலின் ரத்த ஓட்டத்தையும், இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்கும்.

​எந்த வடிவம் சிறந்தது​

இன்றைய காலக்கட்டத்தில் பல வடிவங்களில் வளையல்கள் கிடைத்தாலும், பாரம்பரிய வட்ட வடிவ வளையல் அணிவதே சிறந்தது.

வளையலின் சிறப்பம்சமே, அதன் வட்ட வடிவம். இதனால் எப்போதும் ஒரு சந்தோஷ மனநிலையிலேயே இருப்போம். தொடர்ந்து குலுங்க குலுங்க வளையல் அணிபவர்களுக்கு, ரத்த அழுத்தம் வராது. சீரற்ற மாதவிடாய் ஏற்படாமலிருக்கும்.

​எந்த வகை என்ன பயன்​

தங்கம், வெள்ளி, கண்ணாடி மற்றும் பித்தளை வளையல்கள் அணிவது சிறந்தது. உடல் பருமனாக இருப்பவர்கள் செம்பு வளையல்கள் அணிவதால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரையும்.

பித்தளை வளையல் கனமாக இருக்கும். அதனால், கைகளில் இருக்கும் பிரெஷர் பாயின்ட்டுக்கு நல்லது.

சிப்பி, கிளிஞ்சல் வளையல்கள் அணிந்தால், வாயுத்தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பிளாஸ்டிக் வளையல்கள் அணிவதால் பயனேதும் இல்லை.

​கர்ப்பிணிப் பெண்கள் வளையல் அணிவதற்கான அறிவியல் காரணங்கள்​

கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே பெண்கள் தங்க வளையல் அணிவது நல்லது. தங்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அதனால் வயிற்றில் இருக்கும் குழந்தையில் மூளை நன்றாக செயல்படும்.

பின், வளைகாப்பு நாளில் இருந்து கண்ணாடி வளையல் அணிந்துகொள்ளலாம். குழந்தைக்கு அதன் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும், கர்ப்பப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பிரசவத்துக்குப் பின் ஏதாவது ஒரு வகை வளையல் கண்டிப்பாக அணிய வேண்டும்.

​வளையல் எப்படி அணிய வேண்டும்​

மணிக்கட்டில் இருந்து கைமூட்டு வரை, சிறியதில் இருந்து பெரிதாக வளையல் அணிவது சிறப்பு. தளர்வாக வளையல்கள் அணிய வேண்டாம். கையில் ஒட்டி உரசிக்கொண்டே இருப்பதுபோல, சின்ன வளையல்களாக அணியலாம். ஒரு வளையல் மட்டும் அணிவது, ஒரு கையில் மட்டும் வளையல் அணிவதால் எல்லாம் பலன் எதுவும் கிடைக்காது.

​எந்த நிறத்தில் அணிய வேண்டும்​

மங்களகரமான நிறங்கள் என்பதால் பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்களைத்தான் சடங்கு, திருமணம், வளைகாப்பு என சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்படுத்த வேண்டும்.

குணம் பெற உதவும் சக்தி பச்சை நிறத்திற்குள்ளது. ஊதா நிற வளையல்கள், முடிவெடுக்கும் திறனை அதிகரிக்க செய்யும். பழுப்பு நிற வளையல்கள், சுய சுதந்திர எண்ணத்தை அதிகரிக்கும்.

மஞ்சள் நிற வளையல்கள், நேர்மறையான எண்ணத்தைக் கொடுக்கும். கறுப்பு நிற வளையல்கள், மன தைரியத்தை அதிகரிக்கும். தங்கம் மற்றும் வெள்ளி வளையல்கள், எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.

​பெண்களே இனி, ஆரோக்கியத்தை நினைத்து வளையல் அணியுங்கள் வாழ்த்துகள்...!

No comments:

Post a Comment